வணிகம்

ஸ்விஸ் கணக்கு குறித்து இந்திய விசாரணைக்கு ஒத்துழைப்பு: ஹெச்எஸ்பிசி வங்கி அறிவிப்பு

பிடிஐ

இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிகளில் வைத்துள்ள கணக்குகள் குறித்து, இந்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக ஹெச்எஸ்பிசி கூறியுள்ளது.

ஹெச்எஸ்பிசி வங்கி பல்வேறு நாடுகளுக்கும் வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணைகளுக்கு தகவல்களை அளித்துள்ளது. மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம், கருப்பு பணம் தொடர்பான விவரங்களை அளித்துள்ளதாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய விசாரணை அமைப்புகளுக்கும் உதவி செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது.

ஸ்விட்சர்லாந்தின் தனியார் வங்கியான ஹெச்எஸ்பிசி-க்கு இந்திய விசாரணை அமைப்புகள் விவரங்களைக் கேட்டு அழைப் பாணை கொடுத்துள்ளன என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிப்ரவரி மாதத்தில் ஸ்விஸ் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார் என்பதை ஹெச்எஸ்பிசி வங்கி தனது 2015 -இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் அரசு வழக்கறிஞரின் விசாரணை ஜூன் மாதத்துடன் முடிந்துள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணைக்கு ஹெச்எஸ்பிசி வங்கி ஒத்துழைப்பாக இருக்கும் என்று வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஹெச்எஸ்பிசி ஸ்விஸ் வங்கியில் முறைகேடாக முதலீடு செய்திருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களின் பட்டியல் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இதில் 1,195 இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது.

இந்தியா உள்ளிட்ட சம்பந்தப் பட்ட நாடுகளின் அதிகாரிகள் தங்களது புலனாய்வு குழுவினை அங்கு அனுப்பினார்கள். அமெரிக்கா அரசும் இது குறித்த தகவல்களை கேட்டிருந்தது. இதில் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்களும், அமெரிக்கா வரிச் சட்டங்களை மீறியதாக அவர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT