டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். டிசம்பர் 2014லிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.
2003ல் இந்த நிறுவனத்தின் இயக்குநராக பணிக்குச் சேர்ந்தவர். நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
டாடா இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் அலுவலகத்தில் பொது மேலாளராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறையின் புதிய வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு பொறுப்பு வகித்தார்.
மெக்கின்ஸி அண்ட் கம்பெனி, சாம்சங், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
உலோகம், எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த பணிகளில் வல்லுனர்.
டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பிஏ பொருளாதாரம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்ஏ பொருளாதாரம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நிதியியல்/ சந்தையியலில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.