வணிகம்

பங்குச்சந்தை சரிவைக் கட்டுப்படுத்த விரைவில் வழிகாட்டும் நெறிமுறைகள்: நிர்மலா சீதாராமன்

செய்திப்பிரிவு

பங்குச்சந்தைகள் வேகமாக சரிந்து வரும் நிலையில் இதனை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கியும், செபியும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இதனால் உலகம் முழுவதும் மக்களின் அன்றாட செயல்பாடுகள் முடங்கி பெரும் தொழில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் முதலீட்டாள்களுக்கு பல லட்சம் கோடி ரூாபய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் ‘‘பங்குச்சந்தைகள் வேகமாக சரிந்து வரும் நிலையில் இதனை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கியும், செபியும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

நிதியமைச்சகமும் இதனை ஒருங்கிணைத்து வருகிறது. இதற்காக குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும். இதற்காக சில வழிகாட்டும் நெறிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT