வணிகம்

கரோனா வைரஸ்; பொருளாதார பாதிப்புகள் குறித்து மத்திய அரசு ஆய்வு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் குறித்து மத்திய அரசு ஆலோசனைகள் நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளும் தெரியத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் தொழில்கள் பாதிப்படையும் சூழல் உள்ளது.

இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:

‘‘கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் குறித்து மத்திய அரசு ஆலோசனைகள் நடத்தி வருகிறது. கரோனா வைரஸ் பிரச்சினையால் உலகம் முழுவதுமே சிறு தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சீனா முதல் பல நாடுகளில் இந்த பிரச்சினை உள்ளது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்,’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT