முன்னணி இ-காமர்ஸ் நிறுவ னமான ஸ்நாப்டீல் 500 மில்லியன் டாலர் முதலீடு திரட்ட உள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,269 கோடி) அலிபாபா, சாப்ட்பேங்க், மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்களிலிருந்து இந்த முதலீடுகளை திரட்டுகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு 500 கோடி டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது என தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
தைவானைச் சேர்ந்த பாக்ஸ் கான் குழுமத்தைச் சேர்ந்த ஹொன் ஹாய் பிரீசிசன் இண்டஸ்ட்ரி நிறுவனம் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் 4.27 சதவீத பங்குகளை 20 கோடி டாலருக்கு வாங்குகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த துணை நிறுவன மான வொண்டர்புல் ஸ்டார்ஸ் நிறுவனம் மூலம் இந்த முதலீட்டை மேற்கொள்ள உள்ளது.
இதற்கிடையே இ-காமர்ஸ் நிறுவனமான இபே நிறுவனம், ஸ்நாப்டீல் நிறுவனத்தில் மேற்கொண்டுள்ள முதலீடுகளை விற்க உள்ளது.