பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்குவதற்கு வால்மார்ட் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்த விவாகரத்தில் இந்தியத் தொழில்துறை போட்டி ஆணையம் (சிசிஐ) முறையாக செயல்படவில்லை என்று அனைத்து இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (சிஏஐடி) மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை தேசியநிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்ட வால்மார்ட் நிறுவனம், இந்திய நிறுவனமான பிளிப்கார்டை ரூ.1,13,600 கோடிக்கு வாங்குவதற்கு சிசிஐ 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. சிசிஐயின் முடிவுக்கு எதிராக அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில், அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்புதனது புகாரில் குறிப்பிடப்பட்டதற்கான ஆதாரங்களை அளிக்கத் தவறியுள்ளது. அந்த வகையில் சிசிஐ மீதான புகார்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சிஏஐடி-யின் மனுவை என்சிஎல்ஏடி தள்ளுபடி செய்தது.