யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புத் தொகையை எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வாடிக்கையாளர்கள் கட்டாயம் செலுத்த வேண்டிய கடன் நிலுவை, கடன் அட்டைக்கான நிலுவை உள்ளிட்டவற்றை நெப்ட் மூலம் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் நெப்ட் மற்றும் ஐஎம்பிஎஸ் சேவையைப் பயன்படுத்தி தங்களது நிலுவையை செலுத்த அனுமதிக்கப்படுவர் என யெஸ் வங்கி தெரிவித்துள்ளது. யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதிலும் சிரமம் நிலவுவதால் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வார இறுதிக்குள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிகிறது. நிதி நெருக்கடியில் சிக்கிஉள்ள யெஸ் வங்கியை மீட்பதற்கான வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கி ரூ. 10 ஆயிரம் கோடியை முதலீடு செய்து, வங்கி செயல்பாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும்.