தொழில்துறை தேக்கத்தை தொடர்ந் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.
இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கிராம் 4 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவும், பவுன் 32 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவும் உயர்ந்தது. இந்தநிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ4181-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33448-க்கு விற்பனையாகிறது.
இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் 35120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 49.50 ஆக விற்பனையாகிறது.