வணிகம்

கரோனா வைரஸ் பாதிப்பு: 2009-ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் நுகர்வு பெரும் வீழ்ச்சி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2009ம்- ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் நுகர்வு குறைந்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்ப தெரியத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால் பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவு முடங்கியுள்ளன. தொழிற்சாலை உற்பத்தி குறைந்துள்ளதுடன் மக்கள் பயணமும் முடங்கியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெயின் தேவை கணிசமாக குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் நுகர்வை பொறுத்தவரையில் கடந்த 2009-ம் ஆண்டிற்கு பிறகு இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் நுகர்வு என்பது உலகம் முழுவதும் தற்போது 11 லட்சம் பீப்பாய்கள் என்ற அளவில் குறைந்துள்ளது. 2009-ம் ஆண்டில் தான் இந்த அளவுக்கு கச்சா எண்ணெய் தேவை குறைந்தது. சர்வதேச எரிசக்தி முகமை இந்த தகவலை தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT