வணிகம்

மேம்படுத்தப்பட்ட மென்பொருளை அறிமுகம் செய்தது ‘டேலி’

செய்திப்பிரிவு

நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகள் உட்பட, நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான பயன்பாட்டுக்கான மென்பொருளை உருவாக்கும் நிறுவனமான டேலி, ‘இபிஆர் 9 ரிலீஸ் 6.6’ என்ற மேம்படுத்தப்பட்ட தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

நிறுவனங்கள் அதன் வரவு செலவு கணக்குகளை எளிதாக ஒருங்கிணைத்துக்கொள்ளும் வகையில் மென்பொருள் சேவையை டேலி வழங்கி வருகிறது. பெரு நிறுவனங்கள் முதல் சிறு குறு நிறுவனங்கள் வரை அதன் நிர்வாக செயல்பாட்டை கணக்கிடுவதற்காகவும், திட்டமிடவும் டேலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போதையை வணிகச் சூழல் மாற்றத்துக்கு ஏற்ப புதிய வசதிகள் இந்த மேம்படுத்திய தயாரிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT