வணிகம்

இனிப்பு பலகாரங்களுக்கு இனி காலாவதி தேதி கட்டாயம்

செய்திப்பிரிவு

இனிப்பு பலகாரங்களை விற்பனை செய்யும் கடைகள் இனி இனிப்புப் பொருட்களின் காலாவதி தேதியைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் தெரிவித்துள்ளது.

பேக்கிங் செய்யப்படாமல் விற்கப்படும் இனிப்புகளின் தயாரிப்பு தேதி, தயாரிப்புப் பொருட்கள் உள்ளிட்ட விவரங்கள் அப்பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் குறிப்பிட வேண்டும்என்று உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

கடைகளில் விற்கப்படும் இனிப்புகளின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில்,உணவு பாதுகாப்பு ஆணையும் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 1 முதல் இந்த புதிய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று உணவு வணிக செயல்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே பேக்கிங் செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்களில் காலாவதி தேதி, தயாரிப்புப் பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும் என்றுவிதி உள்ளது.

இந்நிலையில் தற்போது பேக்கிங் செய்யப்படாமல் சில்லரையாக விற்கப்படும் இனிப்புகளுக்கும் அவ்விவரங்கள் குறிப்பிட வேண்டும்.

SCROLL FOR NEXT