வணிகம்

ஹீரோ குழும நிறுவனர் ஓபி முஞ்சால் காலமானார்

செய்திப்பிரிவு

ஹீரோ குழுமத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஓம் பிரகாஷ் முஞ்சால் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். 87 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துவந்தார்.

கடந்த மாதம் தொழிலில் இருந்து முழுமையாக வெளியேறிய இவர் தன்னுடைய மகன் பங்கஜ் முஞ்சாலிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.

ஓம்பிரகாஷ் முஞ்சால், பிரிஜ் மோகன் முஞ்சால், தயானந்த் முஞ்சால் மற்றும் சத்யானந்த் முஞ்சால் சகோதரர்கள் 1944-ம் ஆண்டு சைக்கிளுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியை அமிர்தசரஸில் தொடங்கினார்கள்.

1980களில் உலகளவில் அதிக சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் இருந்தது. இவரது தலைமையில் 3,000 கோடி ரூபாய் குழும நிறுவனமாக மாறியது. அனைந்திந்திய சைக்கிள் உற்பத்தி யாளர் சங்கத்தின் தலைவராகவும் இவர் இருந்தார்.

SCROLL FOR NEXT