அரசின் கடன் பத்திரங்களை உலக வர்த்தக சந்தையில் வெளியிடு வதற்கான முயற்சியில் ரிசர்வ் வங்கி தீவிரமாக இறங்கியிருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதனால் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்திய அரசின் கடன் பத்திரங் களில் எளிதாக முதலீடு செய்யும் வகையில், அரசின் கடன் பத்திரங் களை உலக வர்த்தக சந்தையில் வெளியிடுவது தொடர்பாக சில நிறுவனங்களிடம் கலந்தாலோ சித்து வருவதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் சில குறிப்பிட்ட வகை கடன் பத்திரங்களில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் முழுமை யான அளவில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாக்கப்படும் என்று இம்மாதம் வெளியிடப்பட பட் ஜெட் அறிவிப்பின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது உலக வர்த்தக சந்தை தொடர்பான நிறு வனங்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக சக்திகாந்த தாஸ் தெரி வித்துள்ளார். இது தொடர்பான பணிகள் தீவிரமாக நடந்து வரு வதாகவும் எப்போது வெளியிடப் படும் என்ற கால அளவுகளை உடனடியாகக் குறிப்பிட முடியாது என்றும் அவர் கூறினார். உலக வர்த்தக சந்தையில் இந்திய கடன் பத்திரங்களை வெளியிடுவதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக் கும். விளைவாக உள்நாட்டு நிதி நிலை உயரும் என்றார்.
இந்திய நிதி நிறுவனங்களின் நெருக்கடிக்கடி நிலை குறித்து அவர் கூறியபோது, ‘வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதி நிலையை தீவிரமாக கண்காணித்து வரு கிறோம். எங்கு சிக்கல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. சில நிறுவனங்களில்தான் பணப் புழக் கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நிதி நிறுவனங்களில் நிலைத்தன் மையை உருவாக்க ரிசர்வ் வங்கி கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது’ என்றார்.