கருப்பு பணத்தை தடுக்கும் நடவடிக்கையில் செபி பல நிறுவனங்களை ஆராய்ந்தது. இது 59 நிறுவனங்களுக்கு தடை விதித்திருக்கிறது. குறைவாக வர்த்தகமாகும் பங்குகளில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு செயற்கையான நஷ்டத்தை சில நிறுவனங்கள் அடைந்துள்ளன. அவர்கள் காண்பித்த நஷ்ட கணக்கு மட்டும் ரூ.338 கோடி.
தொழில் மூலம் கிடைத்த மூலதன ஆதாய வரியை ஏமாற்றுவதற்காக லாபத்தை சில நிறுவனங்கள் குறைத்து காண் பித்திருக்கின்றன. சில நிறுவ னங்கள் செயற்கையாக லாபத்தை அதிகரித்து காட்டியது மூலம் பங்குகளின் விலையை உயர்த்தி, நிறுவனங்களின் சந்தை மதிப்பை உயர்த்தியது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
34 நிறுவனங்கள் செயற் கையான நஷ்டத்தை காண்பித் தற்காகவும், 25 நிறுவனங்கள் செயற்கையாக லாபத்தை அதிகரித்தற்காகவும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
100 நிறுவனங்களுக்கு அபராதம்
செபியின் விதிமுறைகளை பின்பற்றாத 100 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் விகிதம், நிதி நிலை முடிவுகள், ஆண்டு அறிக்கை உள்ளிட்ட பல தகவல்களை குறித்த காலத்துக்கு செபியிடம் சமர்ப்பிக்கவேண்டும். அப்படி சமர்ப்பிக்காத 100 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.