ஹோம்பை 360 (HomeBuy360) நிறுவனத்தை ஹவுசிங் டாட் காம் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த இணைப்பின் மதிப்பு சுமார் ரூ.13 கோடி. இந்த நிறுவனம் வீட்டினை வாங்குபவர், ஏஜென்ட் மற்றும் வீடுகட்டும் நிறுவனங்களை இணையம் மூலம் இணைக்கிறது.
நடப்பாண்டில் ஹவுசிங் டாட் காம் நிறுவனம் கையகப்படுத்தும் இரண்டாவது நிறுவனம் இது வாகும்.
“இந்த நிறுவனத்தை வாங்கு வதன் மூலம் எங்களுடைய விற்பனை மற்றும் செயல்பாட்டுக் கட்டணங்கள் குறையும். இந்த இணைப்பு எங்களுக்கு நீண்ட காலத்துக்கு பயன் தரும். தவிர வாடிக்கையாளர்களுக்கும் சிறிதளவு கட்டணம் குறையும்” என்று ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி ரிஷாப் குப்தா தெரிவித்தார்.
இந்த இணைப்பு மூலம் ஆன்லைன் மூலம் ரியல் எஸ்டேட் பிஸினஸில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை ஹவுசிங் டாட் காம் ஒன்றிணைக்கத் தொடங்கி இருக்கிறது.
ஹோம்பை 360 நிறுவனத்தின் நிறுவனர் ரஜத் கோத்தாரி கூறும் போது “இந்திய ரியல் எஸ்டேட் சந்தை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்னும் இந்த சந்தை பல்வேறு கட்டங்களாக பிரிந்து ஒழுங்குபடுத்தப்படாமல் இருக்கிறது. பெரிய வாய்ப்புகள் காத்திருக்கிறது” என்றார்.
ஹவுசிங் டாட் காம் நிறுவனம் 2,551 பணியாளர்களுடன் 100 நகரங்களில் செயல்பட்டு வரு கிறது.