ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நடப்பு நிதி ஆண்டின் 6-வது நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் மேற் கொள்ளப்படவில்லை. முந்தைய அளவான 5.15 சதவீதத்திலேயே ரெப்போ விகிதம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் இம்முறை ரெப்போ விகிதம் குறைக் கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல் 2020-21-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது. 2020-21 நிதி ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி 5.5 முதல் 6.0 சதவீதமாக வும், மூன்றாம் காலாண்டில் 6.2 சத வீதமாகவும் இருக்கும் என்று தெரி வித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலை யில் தற்போதைய கூட்டத்திலும், நடப்பில் நிதி ஆண்டில் வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது.
ரிவர்ஸ் ரெப்போ விகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. முந் தைய அளவின்படியே ரிவர்ஸ் ரெப்போ 4.90 சதவீதமாகத் தொட ரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருமாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தை நடத்துவது வழக்கம். அதில் வட்டி விகிதம் மற்றும் நிதிக் கொள்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். அந்தவகையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையில், நடப்பு நிதி ஆண்டுக்கான 6-வது நிதிக் கொள்கை கூட்டம் செவ்வாய் கிழமை தொடங்கியது. இந்நிலை யில் அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
நுகர்வுப் பணவீக்கம் நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்றுகணித்துள்ளது. வரும் நிதி ஆண்டின் முதல் பாதியில் பணவீக்கம் 5.0 முதல் 5.4 சதவீத அளவிலும், மூன்றாம் காலாண்டில் 3.2 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.
பணவீக்கம் கடும் உயர்வு
பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை உயர்வால் கடந்த டிசம்பர் மாதம் சில்லறைப் பண வீக்கம் 7.3 சதவீதத்தைத் தொட் டது. தற்சமயம் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கவே ரெப்போ விகிதம் குறைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ரெப்போ குறைப்பை வங்கிகள் நடைமுறைப்படுத்தவில்லை; அதனால் ரெப்போ குறைப்பு பலன்கள் மக்களைச் சென் றடையவில்லை என்று கூறப் பட்டு வந்தது. இந்நிலையில் தற் சமயம் வட்டிக் குறைப்பு பலனை முழுமையாக மக்களிடம் சென்று சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், வங்கி வைப்புத் தொகைக்கான காப்பீட்டை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக மத்திய அரசுஉயர்த்தியது. மத்திய அரசின் இம்முடிவால் நிதி நிலை பாதிக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களில் நடை பெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாத கூட்டத்தில் அதிகபட்ச அளவாக 35 அடிப்படை புள்ளிகளும், அக்டோபர் மாதத்தில் 25 அடிப்படை புள்ளிகளும் குறைக்கப்பட்டன. ஆனால் டிசம்பர் மாதத்தில் நடை பெற்ற நிதிக் கொள்கை கூட்டத் தில் ரெப்போ விகிதம் குறைக்கப் படவில்லை. மொத்தத்தில் சென்ற ஆண்டில் மட்டும் 135 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டன. தற்போது நடைபெற்று இருப்பது நடப்பு நிதி ஆண்டின் கடைசி நிதிக் கொள்கை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.