வணிகம்

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பு: குறையும் வரி வருவாய்; என்ன செய்யப்போகிறது அரசு?

நெல்லை ஜெனா

இந்தியப் பொருளாதார சூழல்மந்தமாக இருப்பதால் பொருளாதார நடவடிக்கைகளையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கார்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும் புதிய நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

பொருளாதார மந்தநிலையுடன் வரிகுறைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் பெருமளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக அரசின் வரி வருவாய் ரூ.2.5 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம் கோடி வரையில் குறையலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியப் பொருளாதார சூழல்மந்தமாக இருப்பதால் மறைமுக வரிகளான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.50,000 ஆயிரம் கோடி எனும் அளவுக்குக் குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது. 1.5 லட்சம் கோடி அளவுக்குகுறையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பொருளாதார மந்தநிலையை எதி்ர்கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்களிலும் மத்திய அரசு முதலீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

மொத்தமாக வரி வருவாய் குறையும் பட்சத்தில் இதற்கான நிதி ஆதாரத்தை மத்திய அரசு எப்போது திரட்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவான வரி வருவாய் குறையும்பட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் பணம் திரட்ட மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. எனினும் இதுவரை பேச்சவளவில் மட்டுமே உள்ள நிலையில் இதன் மூலம் வருவாய் ஈட்டுவது என்பது தள்ளிப் போகவே வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT