வணிகம்

ஹெச்டிஎஃப்சி லாபம் 24 சதவீதம் உயர்வு

செய்திப்பிரிவு

வீட்டு அடமானக் கடன் வழங்கும் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 24.3 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்புநிதி ஆண்டில் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.4,196.48 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.3,377 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருமானம் ரூ.29,073 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ.24,653 கோடியாக இருந்தது.

குறைந்த வருவாய் பிரிவினருக்கு மாதந்தோறும் ரூ.9,400கோடி அளவுக்கு வீட்டுக் கடன்அளிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் வழங்கிய மொத்த கடன் தொகையில் 81 சதவீதம் தனிநபர் வீட்டுக் கடனாகும்.

நிறுவனத்தின் இயக்குநர் குழுமுழுவதும் மாற்ற இயலாத பங்கு பத்திரங்களை (என்சிடி) வெளியிட்டு ரூ.45 ஆயிரம் கோடி திரட்டவும் ஒப்புதல் அளித்துள்ளது. வாராக் கடனுக்கு ஒதுக்கிய தொகை ரூ.116 கோடியிலிருந்து ரூ.2,995 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட வகையில் நிறுவனத்தின் நிகர லாபம் நான்கு மடங்கு அதிகரித்து ரூ.8,372 கோடியாக உள்ளதாக பங்குச் சந்தைக்கு அனுப்பிய தகவலில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT