வணிகம்

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அச்சம் காரணமாக பங்குச்சந்தைகள் இன்று பெரும் சரிவை சந்தித்தன.

சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்தநிலையில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அச்சம் காரணமாக பங்குச்சந்தைகள் இன்று பெரும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 458 புள்ளிகள் சரிந்து 41155 புள்ளிகளாக நிறைவடைந்தன.

அதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 129 புள்ளிகள் குறைந்து 12119புள்ளிகளில் நிறைவடைந்தது. வங்கித்துறை, பெட்ரோலிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் சரிவை சந்தித்தன.

SCROLL FOR NEXT