ஆட்டோ எல்பிஜிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் எனவும், வளர்ச்சியைப் பாதிக்கும் கொள்கைகளைத் திருத்தியமைக்க வேண்டும் எனவும் இந்திய ஆட்டோ எல்பிஜி கூட்டமைப்பு நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்தஆட்டோ எல்பிஜியானது தற்போது 18 சதவீத வரியில் உள்ளது. கன்வர்ஷன் கிட்டுக்கு 28 சதவீதம் வரி உள்ளது.
இதுதொடர்பாக ஆட்டோஎல்பிஜி கூட்டமைப்பின் இயக்குநர்ஜென்ரல் சுயாஷ் குப்தா கூறியதாவது, “சூழலுக்கு உகந்ததாக உள்ள ஆட்டோ எல்பிஜிக்கான வரியும் கன்வர்ஷன் கிட்டுக்கான வரியும் மிக அதிகமாக இருக்கிறது. சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் ஆட்டோ எல்பிஜி வரி புகையிலை, ஆடம்பரப் பொருட்களின் வரிக்கு ஈடாக இருக்கிறது. எனவே ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆட்டோ எல்பிஜியின் வரியைக் குறைக்கும் வகையிலான கொள்கைகளை வகுக்கவேண்டும் என நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறோம்” என்றுகூறினார். உலகம் முழுவதுமேபெட்ரோலுக்கு மாற்றாக சூழலுக்கு உகந்ததாக ஆட்டோ எல்பிஜி பயன்படுத்தப்படுகிறது.