வணிகம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் விற்பனை 15% வளர்ச்சி: வருவாய் 5 சதவீதம் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு சொந்தமான பெட்ரோல் நிலையங்கள் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் டீசல் விற்பனை 11 சதவீத அளவிலும், பெட்ரோல் விற்பனை 15 சதவீத அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம், இந்தியாவில் 1,394 பெட்ரோல் நிலையங்களை கொண்டுள்ளது. அதன்மூலம் மாதம் 342 கிலோ லிட்டர் எரிபொருளை ரிலையன்ஸ் விநியோகம் செய்கிறது. இது கிட்டத்தட்ட,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுதுறை நிறுவனங்கள் விற்கும் அளவை விட 2 மடங்கு அதிகம்.

பெட்ரோல் இன்ஜின் கார்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில்பெட்ரோல் விற்பனை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எரிபொருள் விற்பனை மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் வருமானம் 5 சதவீதம் உயர்ந்துரூ.3,725 கோடியாக உள்ளது.

பெட்ரோல் வணிகத்தின் 49 சதவீதப் பங்குகளை இங்கிலாந்தைச் சேர்ந்த பிபி எனப்படும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.7,000 கோடிக்கு விற்க கடந்த ஏப்ரல் மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து அடுத்த 5 ஐந்து ஆண்டுகளில் அதன் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கையை 5,500 -ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

நாட்டில் மொத்தம் 66,817 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. இதில் பொதுத் துறை நிறுவனங்களிடம் மட்டுமே 59,716 நிலையங்கள் உள்ளன.

SCROLL FOR NEXT