வணிகம்

5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவது கடினம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து

செய்திப்பிரிவு

‘2025-க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது கடினம். ஆனால் அது சாத்தியமற்ற இலக்கு அல்ல’ என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரி வித்துள்ளார். இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தால் இந்த இலக்கை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்ற சர்வதேச நிர்வாக மேலாண்மை மாநாட்டில் நிதின் கட்கரி நேற்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘எந்த இலக்கை அடையவும், தீவிரமான உறுதி வேண்டும். அதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடி 2025-க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ண யித்தார்.

ஆனால் தற்போதைய சூழலில் அந்த இலக்கு கடினமான ஒன்று தான். ஆனால், அது அடைய முடியாத இலக்கு இல்லை. இந்தியாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. ஆனாலும் நாம் அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம். குறிப்பாக மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், காப்பர், காகிதம் என பல பொருட்களுக்கு கோடிக்கணக்கில் செலவிட்டு இறக்குமதி செய்கிறோம். இந் தியாவில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி இந்தப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும். இறக்குமதியைக் குறைத்து, உற்பத்தியை அதி கரித்தால் 5 டிரில்லியன் டாலர் இலக்கு அடையக்கூடிய ஒன்று தான்’ என்று கூறினார். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மூலம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். அந்நிறுவனங்களால் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அவர் தெரி வித்தார்.

பொருளாதார நெருக்கடி

இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் சரிந்துள்ளது. இந்நிலையில் மொத்தமாக நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல் லாத அளவிலான சரிவு ஆகும். இந்நிலையில் இது குறித்து அவர் கூறியபோது, ‘உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தற்போது இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடி சுழற்சி முறையிலானது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம், தேவை குறைந்திருப்பது போன்றவற்றால் ஏற்படக்கூடிய சரிவுதான் இது’ என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT