வணிகம்

ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை 4 ஆண்டுகளில் 2 மடங்கு உயரும்

செய்திப்பிரிவு

வங்கிகளில் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை (மொபைல் பேங்கிங்) செய்வோர் எண்ணிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் இரு மடங்கு உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் இவ்விதம் பரிவர்த்தனை செய்வோர் எண்ணிக்கை 180 கோடியாக உயரும் என தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வோர் விகிதம் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என தெரிய வந்துள்ளது.

வளரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை மேற்கொள் வோர் எண்ணிக்கை 70 சதவீத அளவுக்கு வளர்ந்து வருகிறது. ஆனால் வளர்ச்சியடைந்த நாடு களான அமெரிக்கா, கனடா, இங்கிலாந்தில் இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று கேபிஎம்ஜி நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மொபைல் வங்கி பரிவர்த் தனை அதிகரிப்பதற்கு அதனுடன் இணைந்த பிற ஒருங்கிணைந்த சேவைகள் அதிகரிப்பதும் முக்கியக் காரணமாகும்.

சில வங்கிகள் ஆன்லைன் மூலமான வங்கி பரிவர்த்தனைக்கு ஆரம்பத்திலிருந்தே முக்கியத் துவம் தரத் தொடங்கியுள்ளன. இது அத்தகைய வங்கிகளுக்கு சாதகமான அம்சமாகும் என்று கேபிஎம்ஜி-யின் தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவர் அகிலேஷ் துதேஜா தெரிவித் துள்ளார்.

ஆன்லைன் வங்கிச் சேவையை அளிக்கத்தவறும் வங்கிகள் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்று இத்தகைய வங்கி களால் போட்டிகளை எதிர் கொள்ள இயலாமல் போகும்.

மேலும் இந்திய வாடிக்கை யாளர்கள் மிகச்சிறந்த மொபைல் சேவை அளிக்கும் வங்கிகளுக்கு மாறும் போக்கு அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ஆன்லைன் வங்கி பரிவர்த் தனை என்பது வங்கிகளின் செயல் பாடுகளை மேலும் அதிகரிக்கும் விஷயமாகும்.

வாடிக்கையாளர்களை ஈர்க் கும் விஷயமாகும். வங்கிகள் சிறப்பான செயல்பாடுகளை அளிப்பதன் மூலமும், வாடிக்கை யாளர்கள் பயன்படுத்தும் மொபைல் போன், டேப்லெட் உள்ளிட்ட கருவிகள் மூலம் எளிதான செயல்பாடுகளை அளிக்கக் கூடியதாகவும் அது இருக்க வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

SCROLL FOR NEXT