வணிகம்

சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

செய்திப்பிரிவு

6 ஆண்டுகள் இல்லாத அளவு சில்லறை பணவீக்கம் 7.35% ஆக உயர்ந்து உள்ளது.

டிசம்பர் மாதத்தில் வெங்காயம், உருளை கிழங்கு போன்ற காய்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளது. மேலும் பருப்பு வகைகள் 15 சதவீதம் விலை உயர்ந்துள்ளன.

உணவு விலைகள் கணிசமாக உயர்ந்து, தொலைத் தொடர்பு கட்டண உயர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சில்லறை பணவீக்கம் அதிகாரப்பூர்வமாக நுகர்வோர் விலைக் குறியீடு என்று அழைக்கப்படுகிறது. இது ரிசர்வ் வங்கியின் அளவான 6 சதவீதத்தை தாண்டி உள்ளது.

SCROLL FOR NEXT