வணிகம்

ஸ்பைஸ் ஜெட் கட்டண சலுகை: ரூ.799க்கு விமான பயணம்

செய்திப்பிரிவு

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரூ.799 க்கு பயணம் செய்வதற்கான சலுகையை அறிவித்துள்ளது. ஒரு லட்சம் இருக்கைகளை இந்த சலுகைக் கட்டணத்துக்காக ஒதுக்கியுள்ளது.

ஆகஸ்ட் 20 முதல் 22 வரை 3 நாட்களில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகை விலையில் ஆகஸ்ட் 26 முதல் 2016 மார்ச் 26 ஆம் தேதிவரை பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளது. மேலும் தங்களது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10 சதவீத சலுகையையும் பெறலாம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு வழி பயணக் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.799 முதல் அதிக பட்சமாக ரூ.2,699 கட்டணத்தில் டெல்லி, மும்பை, கோவா, பெங்களூரு, நகர் மற்றும் பிற நகரங்களுக்கு செல்லலாம்.

ரூ.799 சலுகையில் டெல்லி- சண்டீகர், மும்பை-கோவா, பெங்களூரு-கொச்சி, மதுரை-சென்னை, ஜம்மு-நகர், கொல் கத்தா-அகர்தாலா வழிகளில் பயணம் செய்யலாம் என்றும் ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது.

உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் தங்களது வளர்ச் சிக்கான ஊக்குவிப்பு நடவடிக் கைகளின் ஒரு பகுதியாக அடிக்கடி சலுகைக் கட்டணங் களை அறிவித்து வருகின்றன.

இது போன்ற சலுகை திட்டங் களால் விமானங்களில் பயணம் செய்வோர் அதிகரித்துள்ளனர். இந்த ஆண்டில் ஜூலை மாதம் வரையிலான 7 மாதங்களில் உள்நாட்டு விமான பயணம் செய்வோர்களில் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT