இந்தியப் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சார்ந்த துறைகள் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்குப் பங்காற்றும் என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தேசியப் பங்குச் சந்தை நிறுவி யுள்ள செயற்கை நுண்ணறிவு மற் றும் இயந்திர கற்றல் தொடர்பான அறிவுசார் மையத்தைத் தொடங்கி வைத்து பேசியபோது இதைத் தெரிவித்தார்.
நிதிசார் துறைகள் பற்றிய விழிப் புணர்வையும் அறிவையும் இளம் தலைமுறையினருக்கு வழங்கும் பொருட்டு தேசியப் பங்குச் சந்தை நிறுவனம் இந்த மையத்தை நிறுவி யுள்ளது.
இந்த மையம் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தின் மூலமாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள், இளைஞர்கள் நிதிசார் துறைகளைப் பற்றிய அறிவைப் பெற முடியும்.
இந்த மையத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட பியுஷ் கோயல் கூறுகையில், “எதிர்காலம் முழுக்க முழுக்க தொழில்நுட்பத் தினால் இயக்கப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதற்கேற்ற வகையில் இளம் தலைமுறையினர் தங் களின் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டியிருக் கிறது. முக்கியமாக நிதிசார் துறை களைப் பற்றி மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் அறிவை யும் விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அறிவுசார் மையங்களைத் திறம் பட பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.