வணிகம்

51 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு

செய்திப்பிரிவு

கருப்புப் பணத்தை ஹாங்காக் கணக்குகளில் பதுக்கியதாக 51 நிறுவனங்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.

2014-15 காலகட்டத்தில் ரூ.1,038கோடி மதிப்பிலான கணக்கில் காட்டாத கருப்புப் பணம் ஹாங்காங்கணக்குகளில் பதுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதியப்பட்டுள்ள 51 நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னையைச் சேர்ந்தவர்களுடையது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட விரோதமான நடவடிக்கைக்கு பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல்வங்கி ஆகிய மூன்று வங்கிகளின் அடையாளம் காணப்படாத அதிகாரிகள் உதவியாக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 48 நிறுவனங்களின் 51 நடப்பு கணக்குகளில் இருந்து கணக்கில் காட்டாத பணம் ஹாங்காங்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இவை மேற்சொன்ன வங்கிகளின் நான்கு கிளைகளில் தொடங்கப்பட்ட கணக்குகளாகும்.

SCROLL FOR NEXT