வணிகம்

மின்வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 62 நகரங்களில் 2,636 சார்ஜிங் நிலையங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

செய்திப்பிரிவு

மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 62 முக்கிய நகரங்களில் மின்சார வாகனங் களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பிர காஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு ஃபேம் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ள 62 முக்கிய நகரங்களில் 2,636 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, அதிகபட்ச அளவாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 317 நிலையங்கள் அமைக்கப்பட உள் ளன. ஆந்திர பிரதேசத்தில் 266, தமிழ்நாட்டில் 256, குஜராத்தில் 228, உத்தரபிரதேசத்தில் 207 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப் பட உள்ளன.

சார்ஜிங் நிலையங்கள் அமைப் பது தொடர்பாக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் கீழ், 106 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் முறையே 7000 நிலை யங்கள் வரை அமைப்பதற்கு விண் ணப்பங்கள் குவிந்தன. பல்வேறு கட்ட மதிப்பீடுகளுக்குப் பிறகு 19 பொது நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனங்கள் 24 மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட 62 நகரங்களில் 2,636 சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணி களை மேற்கொள்ளும்.

இதுகுறித்து ஜவடேகர் கூறுகை யில்,‘மின்சார வாகனங்கள் மீது மக் களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. சில குறிப்பிட்ட நகரங்களில் 4 கிமீ பரப்பளவில் 1 சார்ஜிங் நிலை அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT