வணிகம்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் காரணமாக பங்குச் சந்தையில் சரிவு; கச்சா எண்ணெய் விலை உயர்வு

செய்திப்பிரிவு

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள் ளது. கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்தன.

நேற்று அமெரிக்க அரசு, ஈரா னின் மிக முக்கிய ராணுவத் தளபதி களில் ஒருவான ஜெனரல் காசிம் சுலைமானியை கொன்றது. அதைத்தொடர்ந்து உலகளாவிய நாடுகளின் பங்குச் சந்தையில் கடும் மாற்றம் ஏற்பட்டது. அதன் நீட்சியாக இந்தியப் பங்குச் சந்தையிலும் சரிவு காணப்பட்டது.

நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் 162.03 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 41,464.61-ஆக நிலை கொண்டது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை யில் 55.55 புள்ளிகள் சரிந்து குறியீட் டெண் 12,226.65- ஆக நிலை கொண்டது.

உலக நாடுகளுக்குத் தேவை யான கச்சா எண்ணெயில் பெரும் பகுதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே பெறப்படுகிறது. இந்நிலையில் ஈரான் மீதான தாக்கு தலால் உலகளாவிய அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் விலை 4.3 சதவீதம் உயர்ந்து 69.08 டாலரை தொட்டது.

ஏற்கெனவே இந்தியாவில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்வை கண்டு வருகிறது. இந் நிலையில் தற்போதைய நிகழ்வால் இந்தியா கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்தியா, அதன் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. குறிப்பாக ஈராக்கிடமிருந்தே அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இந்தியா, 2018-19 நிதி ஆண்டில் 207.3 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது. அதில் 46.61 மில்லியன் டன் ஈராக்கிடமிருந்து வாங்கப்பட்டது. சீனா, ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

இந்தத் தாக்குதலால் தங்கம் மற் றும் வெள்ளி விலையும் உயர்ந் தன. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 உயர்ந்து ரூ.30,520 -ஆக உள்ளது. இந்த நிகழ்வால் உலகாளவிய நாடுகளின் பங்குச் சந் தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தை 0.39 சதவீத அளவிலும், தேசிய பங்குச் சந்தை 0.45 சதவீத அளவிலும் சரிந்துள்ளன. ஏசியன் பெயின்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.16 சதவீதம் அளவில் சரிந்தது. தவிர, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, என்டிபிசி ஆகியவற்றின் பங்கு மதிப்புகளும் சரிவைக் கண்டன.

SCROLL FOR NEXT