பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் தயாநிதி மாறன் முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து சன் டிவி குழும பங்குகள் இன்று பங்குச் சந்தையில் சரிவு கண்டன.
தயாநிதி மாறன் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவே அவரது முன் ஜாமீனை ரத்து செய்யுமாறு சிபிஐ கோரியிருந்தது, இந்த வழக்கில் நேற்று, தயாநிதி மாறன் முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் ரத்து செய்ததோடு, சிபிஐ-யிடம் தயாநிதி மாறன் சரணடைய 3 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து மும்பைப் பங்குச் சந்தையில் சன் டிவி குழுமத்தி பங்குகள் 6.52% சரிவு கண்டு ரூ.318.70 ஆக இருந்தது. தேசியப் பங்குச் சந்தையில் சன் குழும பங்குகள் 6.74% சரிவு கண்டு ரூ.318.20 ஆக விற்பனை ஆகி வருகிறது.