வணிகம்

பொருளாதார மந்தநிலை எதிரொலி: நடப்பு ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு சரிவு

செய்திப்பிரிவு

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால், நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மேற்கொள்வதைத் தவிர்த்துள்ளன. மட்டுமல்லாமல், ஐபிஓ வழியாக திரட்டப்படும் நிதி அளவு இந்த ஆண்டு 60 சதவீதம் சரிந்துள்ளது.

நிறுவனங்கள், அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் பொதுப் பங்கு வெளி யிட்டு, அதன் மூலம் நிதி திரட்டுவது வழக்கம். அந்த வகையில் 2019-ம் ஆண்டில் மிகக் குறைந்த அளவிலேயே நிறுவனங்கள் ஐபிஓ மேற்கொண்டுள்ளன. தவிர, சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவை குறைந்த அளவிலேயே நிதி திரட்டி உள்ளன.

நடப்பு ஆண்டில் 16 நிறுவனங் கள் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. அந்நிறுவனங்கள் மொத்தமாக ரூ.12,362 கோடி அள வில் நிதி திரட்டி உள்ளன. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 60 சதவீதம் குறைவு ஆகும். சென்ற ஆண்டு 24 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட நிலையில், அவை ரூ.30,959 கோடி அளவில் நிதி திரட்டின.

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார மந்தநிலை உச்சம் தொட்டுள் ளது. முதல் காலாண்டில் வளர்ச்சி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் குறைந்தது. இந்நிலையில் ஐபிஓ மேற்கொள்ள அனுமதி பெற்ற நிறு வனங்கள், அதை உரிய காலத்தில் மேற்கொள்ள தவறி உள்ளன. கிட்டத்தட்ட 47 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.51,000 கோடி நிதி திட்ட `செபி'-யிடம் ஒப்புதல் பெற்றன. ஆனால் தற்போதைய பொருளாதார சூழ்நிலையால் அந்நிறுவனங்கள் ஐபிஓ-வை தவிர்த்துள்ளன.

2017-ம் ஆண்டு 36 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு மேற்கொண்டன. அதன் மூலம் அவை ரூ.67,147 கோடி நிதி திரட்டின. 2016-ல் 26 நிறுவனங்கள் ரூ.26,494 கோடியும், 2015-ல் 15 நிறுவனங்கள் ரூ.13,614 கோடி அளவிலும் ஐபிஓ மூலம் நிதி திரட்டியுள்ளன.

மிக குறைந்தபட்ச அளவாக, 2014-ம் ஆண்டில் 5 நிறுவனங்கள் மட்டுமே பொதுப் பங்கு வெளியீடு மேற்கொண்டன. அதன் மூலம் ரூ.1,201 கோடி திரட்டின. இந்நிலையில் 2014-க்குப் பிறகு முதன்முறையாக 2019-ம் ஆண்டில்தான் குறைந்த அளவில் நிதி திரட்டப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டாலும், நிலவி வரும் பொருளாதார சூழல் காரணமாக நிறுவனங்கள் ஐபிஓ மேற்கொள்ள வதைத் தவிர்த்துள்ளன.

ஐபிஓ-வைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஐபிஓ-வில் நிர் ணயிக்கப்பட்ட விலையைவிட குறைவாக வர்த்தகமாயின. மீத முள்ள நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் 21 சதவீதம் முதல் 170 சதவீதம் வரை ஏற்றம் கணடன.

அதேசமயம் எஸ்எம்இ பிரிவில் ஐபிஓ வெளியீடு சரிந்து உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த ஆண்டில்தான் எஸ்எம்இ-யின் ஐபிஓ குறைந்துள்ளது. சென்ற ஆண்டு 141 எஸ்எம்இ நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.2,287 கோடி நிதி திரட்டிய நிலையில், நடப்பு ஆண்டில் 50 நிறுவனங்களே ஐபிஓ வெளியிட்டுள்ளன. அதன் மூலம் அவை ரூ.621 கோடி அளவிலேயே நிதி திரட்டி உள்ளன.

SCROLL FOR NEXT