கோப்புப்படம் 
வணிகம்

அந்நிய சந்தைகளிலிருந்து இந்திய நிறுவனங்கள் 3,000 கோடி டாலர் கடன்: உள்நாட்டு சந்தையில் நிதிப் புழக்கம் குறைவு

செய்திப்பிரிவு

இந்திய சந்தையில் நிதிப் புழக்கம் குறைந்துள்ள நிலையில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடு களிலிருந்து கடன் பெறுவது அதி கரித்துள்ளது. நடப்பு ஆண்டில் 30 பில்லியன் டாலர் அளவில் இந் திய நிறுவனங்கள் வெளிநாடுகளி லிருந்து கடன் பெற்று உள்ளன.

வங்கிகளில் வாராக் கடன் அதி கரித்து வந்த நிலையில், இந்திய வங்கிகள் கடன் வழங்குவ தில் நெருக்கடியை எதிர்கொண் டுள்ளன. இதனால் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பணப் புழக்கம் குறைந்தது. இந்நிலை யில் அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையிலிருந்து கடன் பெறுவதை அதிகரித்துள்ளன.

இதுகுறித்து ‘டாய்ஷ் வங்கி இந்தியா’வின் நிர்வாக இயக்குநர் அம்ரிஷ் பாலிகா கூறுகையில், ‘இந்திய நிறுவனங்கள் அதன் பயன் பாட்டுக்குத் தேவையான நிதியை இந்திய சந்தையில் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றன. தற்போதைய பொருளாதார நிலையில் உள்நாட்டு சந்தையில் நிதிப் புழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைகளை நாடிவருகின்றன.

தவிரவும் கடன் பெறுவதற்கான செலவு இந்திய சந்தையைவிட வெளிநாட்டு சந்தைகளில் குறை வாக உள்ளது. இதன் காரண மாகவும் வெளிச்சந்தைகளில் இருந்து கடன் பெறுவது உயர்ந் துள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT