வணிகம்

வருமான வரி நிலுவை ரூ.10 லட்சம் கோடியாக உயர்வு

செய்திப்பிரிவு

அரசு வரி வருவாயை உயர்த்துவதற்கான வழிகளைக் கண்டறியபெரும் முயற்சிகளை எடுத்துவருகிறது. வருமான வரித் துறை அதிகாரிகளையும் இதை நோக்கி முடுக்கிவிட்டுள்ளது.

ஆனால், வழக்குகளினால் நிலுவையில் இருக்கும் வருமான வரி 2019-ம்ஆண்டில் ரூ.10 லட்சம் கோடியாகஉயர்ந்துள்ளது. 2018-ம் ஆண்டுக்குப் பிறகு மட்டுமே வழக்குகளினால் நிலுவையில் உள்ள வருமான வரியின் மதிப்பு ரூ.3.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி வருமான வரி கோரிக்கை ரூ.12.30 லட்சம் கோடி மதிப்பளவில் இருப்பதாகவும் அதில் ரூ.12.17 லட்சம் கோடியை மீட்பது கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சிஏஜி அறிக்கையும் சுட்டிக்காட்டி உள்ளது. அரசின் மொத்த வருமான வரி கோரிக்கையில் 98.6 சதவீத வரியை வசூலிப்பது கடினம் என கூறியுள்ளது.

எந்த வருவாயையும் ஈட்டுத் தராத வரி கோரிக்கைகளை வருமான வரித் துறை தள்ளுபடி செய்துவிட வேண்டும் எனவும் சிஏஜி குறிப்பிட்டுள்ளது.

மேலும் யாருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளதோ அவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதாக நிதி சார் கமிட்டி முன்னிலையில் அடிக்கடி வருமான வரி துறை கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளது. பெரும்பாலான வழக்குகள் மேல்முறையீடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாகவும் கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசு வருவாயை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை திட்டமிடுகிறதோ அதேபோல் சட்டப்படி நிலுவை வரியை மீட்பதும் அவசியம். இதற்கு முதல்முன்னுரிமை கொடுத்து சரியானதிட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என்று வருமான வரித் துறைக்குகமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

பின்னடைவு

வருமான வரி ஏய்ப்பை குறைத்துவரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், வருமான வரி கோரிக்கைகளில் இருக்கும் பிரச்சினைகள் அது சார்ந்த வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால் நிலுவையில் இருக்கும் வருமான வரி உயர்ந்து வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT