முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.1.19 லட்சம் கோடி (17 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.4.2 லட்சம் கோடியாக (61 பில்லியன் டாலர்) உள்ளது. இந்த ஒரு வருட காலகட்டத்தில் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா-வின் சொத்து மதிப்பு ரூ.77,000 கோடி (11 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் இந்த ஓராண்டில் ரூ.92,400 கோடி (13.2 பில்லியன் டாலர்) இழந்துள்ளார். இந்நிலையில் அம்பானியின் சொத்து மதிப்பு, இந்த ஓராண்டில் 40 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது.
சமீபகாலமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. சென்ற மாத இறுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, தகவல் தொடர்பு துறையில்முன்னணி நிறுவனமாக விளங்கிவருகிறது. ஜியோவின் அறிமுகத்துக்குப் பிறகு ரிலையன்ஸின் சந்தை மதிப்பு பெருமளவில் உயரத் தொடங்கியது. இந்நிலையில், இணைய வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் கால் பதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.