என். மகேஷ்குமார்
தனது சொந்த மாவட்டமான கடப் பாவில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரூ. 15 ஆயிரம் கோடியில் இரும்பு தொழிற் சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், சுண்ணபுராள்ள பள்ளி எனும் ஊரில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.15 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட உள்ள இரும்பு தொழிற் சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக அவர் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது, கடப்பா மாவட்டத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் இரும்பு தொழிற்சாலை அமைவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன் மூலம் கடப்பாவில் வேலை வாய்ப்புகள் பெருகும். ஆனால், இதே இரும்பு தொழிற்சாலை அமைக்க தேர் தலுக்கு 6 மாதங்களுக்கு முன் சந் திரபாபுநாயுடு தேங்காய் உடைத்து விட்டுப் போனார். ஆனால், தற் போது தான் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. ஆட்சி அமைத்து வெறும் 6 மாதங்களில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்னும் 3 ஆண்டுகளுக்குள் கட்டி டப்பணிகள் பூர்த்தி செய்யப்படும்.
ஆண்டுக்கு 30 லட்சம் டன் இரும்பு உற்பத்தி இங்கு நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் இரும்பு தொழிற்சாலை கனவு இப்போது நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.