வணிகம்

பொதுப் பங்கு வெளியிட 30 நிறுவனங்கள் தயார்: ரூ.16 ஆயிரம் கோடி திரட்ட திட்டம்

பிடிஐ

தங்கள் கடன் சுமையைக் குறைக் கவும், விரிவாக்க நடவடிக்கை களுக்காகவும் 30 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு மூலம் பணம் திரட்ட திட்டமிட்டுள்ளன. இந்நிறுவனங்கள் சுமார் ரூ.16 ஆயிரம் கோடியை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளன.

இந்நிறுவனங்களில் 19 நிறுவ னங்கள் ஏற்கெனவே பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) அனுமதி பெற்றுவிட்டன. ஐபிஓ வெளியிடுவதற்கான தகவல் குறிப்புகளைத் தயாரிக்கும் பணியில் 8 நிறுவனங்கள் ஈடுபட் டுள்ளன.

இதனிடையே ஜிவிகே குழுமத் தின் அங்கமான ஜிவிகே விமான மேம்பாட்டு நிறுவனம் மற்றும் டீம் லீஸ் நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி செபி-யை அணுகியுள்ளன.

ஜிவிகே ஏர்போர்ட் மேம்பாட்டு நிறுவனம் ரூ.3,000 கோடிக்கு பொதுப்பங்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. இதேபோல டீம் லீஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.500 கோடி திரட்ட உள்ளது.

பொதுப் பங்கு வெளியிட செபி-யை அணுகியுள்ள நிறுவனங் களில் நடுத்தர நிறுவனங்களும் அடங்கும். இவை ரூ. 200 கோடி முதல் ரூ. 3 ஆயிரம் கோடி வரை ஐபிஓ வெளியீடு மூலம் திரட்ட செபி-யிடம் அனுமதி கோரி யுள்ளன.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நவகர் கார்ப்பரேஷன் ரூ.600 கோடி திரட்டுவதற்கான பொதுப் பங்கு வெளியீட்டை அடுத்த வாரம் வெளியிடுகிறது. இதே போல திலீப் பில்ட்கான் நிறுவனம் ரூ.650 கோடிக்கான பொதுப்பங்கு வெளியீட்டை இம்மாதம் மேற் கொள்ள உள்ளது.

பொதுப்பங்கு வெளியீட்டில் பல்வேறு விதிமுறைகளைக் கொண்டு வருவதன் மூலம் முதலீட்டாளர்களின் நலன்களை செபி காத்து வருகிறது. அதன்படி பட்டியலிடும் காலத்தைப் பாதி யாகக் குறைத்துள்ளது. மேலும் மனுக்களை பரிசீலிக்கும் காலமும் குறைக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டில் இதுவரை 25 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடு வதற்கான வரைவு ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளன. இதே காலகட்டத்தில் 25 நிறுவ னங்கள் தங்கள் நிறுவன பங்கு விற்பனைக்கு அனுமதி கோரியுள்ளன. இவற்றில் சில நிறுவனங்களின் மனுக்கள் கடந்த ஆண்டு நிலுவையில் இருந்த வையாகும்.

கடைசியாக செபியிடம் 8 நிறுவனங்களின் வரைவு விண்ணப் பங்கள் நிலுவை யில் உள்ளதாகத் தெரிகிறது.

இதுவரையில் 10 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு மூலம் ரூ.4,700 கோடியைத் திரட்டியுள்ளன. முந்தைய இரண்டு ஆண்டுகளில் பொதுப்பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்டதைக் காட்டிலும் இது அதிகமாகும்.

2014-ம் ஆண்டு 6 நிறுவனங் களின் ஐபிஓ வெளியானது. இவை திரட்டிய தொகை ரூ.1,261 கோடியாகும். 2013-ல் 3 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு மூலம் திரட்டிய தொகை ரூ. 1,284 கோடியாகும்.

இண்டிகோ விமான சேவையில் ஈடுபட்டுள்ள இன்டர் குளோப் ஏவியேஷன் நிறுவனம் ரூ. 2,300 கோடியை திரட்ட உள்ளது. காபி டே எண்டர்பிரைசஸ் ரூ. 1,150 கோடியையும், ஆர்பிஎல் வங்கி (முன்னர் ரத்னாகர் வங்கி என்றழைக்கப்பட்டது) ரூ. 1,100 கோடியையும் திரட்ட உள்ளன.

மேட்ரிக்ஸ் செல்லுலர், கத்தோலிக் சிரியன் வங்கி, அல்கீம் லேபரட்டரீஸ், எஸ்ஹெச் கேல்கர் அண்ட் கம்பெனி, அமர் உஜாலா பப்ளிகேஷன்ஸ், இன்ஃபிபீம் இன்கார்ப்பரேஷன், ஏஜிஎஸ் டிரான்ஸாட் டெக்னாலஜீஸ், நியூமரோ யுனோ குளோத்திங், பரன்ஜபே கட்டுமான நிறுவ னங்கள் பொதுப் பங்கு வெளியிட காத்திருக்கும் பிற நிறுவனங் களாகும்.

SCROLL FOR NEXT