இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு பெரும் வீழ்ச்சியை சந்தித்த நிலையிலும், இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது.
2019-ம் ஆண்டில் பங்குச் சந்தை யில் இதுவரையிலாக ரூ.1.33 லட் சம் கோடி அளவில் அந்நிய முத லீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பங்குகளில் மட்டும் ரூ.97,250 கோடி அளவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
2019-ல் ரூ.18 டிரில்லியன் மதிப்பிலான பத்திரங்கள் மற்றும் பங்கு களை அந்நிய முதலீட்டாளர்கள் வாங்கினர். அதில் ரூ.16.7 டிரில் லியன் மதிப்பிலான பத்திரங்கள், பங்குகளை விற்றனர். இந் நிலையில் தற்போது அவர்கள் கைவசம் ரூ.1.33 டிரில்லியன் மதிப்பிலான பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன.
கடந்த 2016 - முதல் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.
2017-ல் ரூ.2 லட்சம் கோடி முதலீடு மேற் கொள்ளப்பட்டது. மறுவருடம், 2018-ல் ரூ.81,000 கோடி முதலீடு வெளியேறியது. இந்நிலையில் தற்போது 2019-ம் ஆண்டு 1.33 டிரில்லியன் முதலீடு வந்துள்ளது.கடந்த 2014-ம் ஆண்டில் முதலீட்டு மதிப்பு ரூ.2.5 டிரில்லியனாக இருந்தது.
அடுத்த ஆண்டு அந்நிய முதலீடு
2020-ம் ஆண்டும் பங்குச் சந்தை யில் அந்நிய முதலீடு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, சீனா-அமெரிக்கா வர்த்தகப் பிரச்சினை, கச்சா எண் ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் அந்நிய முதலீடு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.