‘நாட்டின் உட்கட்டமைப்பை உலகத் தரத்தில் உருவாக்கும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது. அந்தவகை யில் நெடுஞ்சாலை துறைக்கென அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.15 லட் சம் கோடி செலவிடப்பட உள்ளது’ என்று மத்திய அமைச் சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன திருத்தச் சட்டம், பாஸ்டேக் என போக்கு வரத்து தொடர்பாக புதிய மாற்றங் களை மத்திய அரசு கொண்டு வந் துள்ளது. இந்நிலையில் சாலை வசதிகளை மேம்படுத்தும் வகை யில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி செலவிட உள்ளது.
‘கடந்த 5 ஆண்டுகளில் தரை வழிப் போக்குவரத்து துறைகள் சார்ந்து ரூ.17 லட்சம் கோடி முத லீடு செய்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலை துறைக்கு மட்டும் ரூ.15 லட்சம் கோடி செலவிட உள்ளோம்’ என்று தெரிவித்தார்.
தற்போது சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் டோல் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் உயரும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தினால் சாலைவிதி களை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிப்பதாக தெரிவித்தார். நாடு முழுவதும் 22 லட்சம் அளவில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை உள்ளது. விரைவில் அது நிவர்த்தி செய்யப்படும் என்று தெரி வித்தார்.