சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள இளைஞர்களுக்கு வாய்ப் பளிக்க உள்ளது.
செபி குறிப்பிட்டுள்ள ஒரு வருட இன்டர்ன்ஷிப் திட்டத்தில் டேட்டா அனாலிடிக்ஸ் உட்பட பல் வேறு புராஜக்டுகளில் பயிற்சி மேற் கொள்ளும் வாய்ப்பு வழங்கப் படும். முக்கிய கல்வி நிலையங் களுடன் இணைந்து இதற்கான ஏற் பாடுகள் செய்யப்படும் என செபி தரப்பில் கூறியுள்ளது.
இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வரை ஸ்டைஃபண்டாகவும் வழங்கப் படும். எம்பிஏ அல்லது எம்சிஏ தொடர்பான பட்டங்களைப் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இன்ஜினியரிங் மற்றும் பிசிஏ படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்க 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். ஜனவரி 20-க்குள் விண்ணப்பங்களை செபி அலு வலகத்துக்கு அனுப்ப வேண்டும்.