கோப்புப்படம் 
வணிகம்

அரசு சேவை, இன்சூரன்ஸ் பயன்பாடுகளுக்கென பிளாக்செயின் செயலிகள் இன்ஃபோசிஸ் அறிமுகம்

செய்திப்பிரிவு

இன்ஃபோசிஸ் நிறுவனம் அரசு சேவைகள், இன்சூரன்ஸ், சப்ளை செயின் போன்ற பிரிவுகள் தொடர்புடைய பயன்பாட்டுக்கென பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக் கொண்ட மூன்று செயலிகளை நேற்று அறிமுகம் செய்துள்ளது.

வணிக சேவைகள் தொடர்பான தகவல்களை விரைவாக அலசி துல் லியமான பதில்களை இச்செயலி வழங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, தொழில் முதலீடுகள் மீதான வருவாயை கணித்துத் தரக்கூடியதாக இந்தச் செயலி இருக்கும்.

தற்போது செயற்கை நுண் ணறிவு, பிளாக்செயின் போன்ற தொழில்நுட்பங்கள் பரவலான வளர்ச்சியை கண்டுவருகின்றன. உற்பத்தி துறை முதல் வங்கி செயல்பாடுகள் வரை இவ்விரு தொழில்நுட்பங்களின் பயன்பாடு முதன்மையானதாக மாறிவருகின் றது. குறிப்பாக லாஜிஸ்டிக் துறை களில் இவை முக்கியமானதாக மாறியுள்ளன.

அந்த வகையில் இன்ஃபோ சிஸ் நிறுவனம், பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படை யிலான மூன்று புதிய செயலிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தச் செயலிகள் அரசு சார்ந்த சேவை கள், இன்சூரன்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மன்ட் போன்றவற்றுக்கு பயன்படும் வகையில் உரு வாக்கப்பட்டு இருக்கின்றன.

SCROLL FOR NEXT