அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் சமீபத்திய மழையால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அரசு இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் கள் சங்கத்தின் தலைவர் ஏ.என்.சுஜீஷ் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் தொழில் வளர்ச் சியை ஊக்குவிக்க 1960-ல் அம்பத் தூர் தொழிற்பேட்டை தொடங்கப் பட்டது. 1,430 ஏக்கர் பரப் பளவைக் கொண்ட இந்த தொழிற் பேட்டையில், தற்சமயம் 2,000 தொழில் நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன.
முறையான திட்டமிடல் இல்லை
சமீபத்தில் பெய்த மழையால் தொழிற்பேட்டையைச் சுற்றி யுள்ள கால்வாய்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டு, நிறுவ னங்களுக்குள் கழிவுநீர் புகுந்து விட்டது. இதனால் பல கோடி மதிப் பிலான பொருட்கள் சேதமடைந் துள்ளன.
இதுகுறித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் கள் சங்கத்தின் தலைவர் ஏ.என். சுஜீஷ் கூறியபோது, ‘இந்தப் பகுதிகளைச் சுற்றிய கால்வாய்கள் முறையாக திட்டமிட்டு உருவாக்கப் படவில்லை.
சிறிய மழைக்கே அக்கால் வாய்களில் நீர் தேக்கம் ஏற்படு கிறது. மழைக்காலங்களில் அந்தப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. அதனால் அந்தப் பகுதியில் உள்ள கிராமங் களும், தொழில் நிறுவனங்களும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அரசு துரிதமாக இதில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.