டிஹெச்எப்எல் பரமெரிக்கா லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.
வீட்டுக்கடன் நிறுவனமான டிஹெச்எப்எல் நிறுவனத்தோடு கூட்டு வைத்துள்ள அமெரிக்க நிறுவனம் இது.
சில்லரை நிதிச்சேவை துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
டாயிஷ் போஸ்ட் பாங்க் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
டிஹெச்எப்எல் நிறுவனத்தில் தலைவர், மற்றும் பர்ஸ்ட் ப்ளூ நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.
சோழமண்டலம் எம்எஸ் பொதுக் காப்பீடு நிறுவனம், ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளநிலை ரசாயனத்தில் பட்டம் பெற்றவர். குர்காவ்னில் உள்ள எம்டிஐ கல்வி நிறுவனத்தில் நிதி மற்றும் சந்தையியல் துறையில் உயர்கல்வி கற்றவர்.