வணிகம்

வட்டி விகித குறைப்பு மீண்டும் தொடரலாம்: ஆர்பிஐ கவர்னர் சூசகம்

செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை வரும் காலங்களில் குறைக்க வாய்ப்புள்ளதாக அதன் கவர்னர் சக்தி காந்த தாஸ் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை தீவிரமடைந்த நிலை யில், பணப்புழக்கத்தை அதிகரிக் கும், நிதி நிறுவனங்கள் அதிக அள வில் கடன் வழங்குவதை ஊக் குவிக்கவும் 2019-ம் ஆண்டில் நடை பெற்ற முதல் 5 நிதிக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் இதனால் பலன் ஏற் படவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில் டிசம்பரில் சமீபத் தில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத் தில் வட்டி விகிதம் குறைக்கப் படவில்லை. முந்தைய வட்டி விகிதமே தொடரும் எனக் கூறப் பட்டது. இதையடுத்து வட்டி விகித குறைப்பு நடவடிக்கை முடிவு வந்து விட்டதாகவும், பணவீக்கம் உயர்ந்து வருவதால் வட்டி விகிதம் இனி குறைக்கப்பட வாய்ப்பில்லை என்றும் கருத்துகள் வெளியா யின.

இந்நிலையில், டிசம்பரில் வட்டி விகிதம் குறைக்கப்படாததற்கு காரணம், சரியான தருணத்தை எதிர்பார்த்திருந்ததால்தான் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதாவது வட்டி விகித குறைப்பைத் தொடர்ச் சியாக செய்யாமல், சரியான நேரத் துக்காகக் காத்திருக்கிறோம் என்று

தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதா வது, தற்போது வங்கிகள் தங்களது சொத்துகளின் தரத்தை உயர்த்துவ தில் தீவிர கவனம் செலுத்திவரு கின்றன. வாராக்கடன்களைக் குறைக்கவும், வங்கியின் நிதி நிலையை சரிசெய்யவும் முயற்சி களை எடுத்துவருகின்றன. வங்கி களின் முயற்சிகள் பலன் தரத் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் மட்டுமல்ல சர்வ தேச அளவில் பொருளாதார நெருக் கடி நிலவுகிறது. இதற்கு நாடுகளுக் கிடையிலான பொருளாதார கொள்கைகள், உடன்படிக்கைகள் இசைவாக இல்லாதிருப்பதே காரணம். பன்மை சமூகம் என்பது நாடுகளுக்கிடையிலான உறவில் காணாமல் போகிறது. நாடுகள் தங்களுக்குள் மட்டுமே சாதக பாதகங்களைப் பங்கிட்டுக்கொள்ள விரும்புகின்றன.

ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பிரச்சினை நிலவுகிறது. நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அனைத்து பொருளாதார பிரச் சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதற்கான தேவையும் அவசியமும் வாய்ப்பும் இருப்பதாக கிறிஸ்டியன் லகார்டேவும் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT