வணிகம்

ஆட்டோமொபைல் துறை தேக்கத்தில் இருந்தாலும் டாடா மோட்டார்ஸில் ஆட்குறைப்பு திட்டம் இல்லை: சிஇஓ குந்தர் புட்செக் தகவல்

செய்திப்பிரிவு

ஆட்டோமொபைல் துறை பெரும் தேக்கத்தைச் சந்தித்துள்ள நிலையில் பல நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளையும், வேலையில்லா விடுமுறை நாட்களையும் அறிவித்துவந்தன. ஆனால், தேக்க நிலை காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கும் திட்டம் எதுவும் டாடா மோட்டார்ஸில் இல்லை என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி குந்தர் புட்செக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, வாகனத் துறையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் தேக்க நிலை சுழற்சி முறையிலானது அல்ல. மாறாக, இது அமைப்பு ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய முப்பது ஆண்டுகால அனுபவத்தில் இப்படி ஒரு ஏற்ற இறக்கத்தை சந்தித்தது இல்லை. இந்த சூழ்நிலையை மிக நுட்பமாக கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வாகனத் துறை கடந்த ஒரு வருடமாக கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. வாகன விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி அளவை குறைத்துள்ளன. 3.5 லட்சத்துக்கும் மேலாக வாகனத் துறை சார்ந்த ஊழியர்கள் பணியிழந்துள்ளனர்.

இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கைய மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.

‘நெருக்கடி நிலையின் காரணமாக ஊழியர்களின் எண் ணிக்கையை குறைக்க விரும் பினால் அதை ஆரம்ப கட்டத்தி லேயே செய்திருப்போம். ஆட் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை’ என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT