நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். ஆகஸ்ட் 1- ம் தேதியிலிருந்து இந்தப் பொறுப்பை வகிக்கிறார். இதற்கு முன்பு நெஸ்லே பிலிப்பைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றினார்.
நெஸ்லே இந்தியா விற்பனைப் பிரிவு தலைவராக பணியாற்றியுள்ளார். 1999 ல் செயல் துணைத் தலைவராக இந்தியாவிலிருந்து பணிக்குச் சேர்ந்தார்.
நெஸ்லே எகிப்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும், வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான தலைமை பொறுப்பிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
பால் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் துறையில் விற்பனை, வாடிக்கையாளர் மேலாண்மை போன்றவற்றில் முக்கிய தொழில் உத்திகளை வகுத்தவர்.
தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், வியட்நாம் போன்ற இந்தோ சீனா பிராந்திய நாடுகளில் நெஸ்லே உணவுத்துறை சந்தையின் செயல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார், இலங்கை, வங்கதேசம், நேபாளம், சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளிலும் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு இவரை பாராட்டி விருது வழங்கியுள்ளது.
டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பொருளாதார பட்டம் பெற்றவர், சுவிட்சர்லாந்தின் ஐஎம்டி கல்வி நிறுவனத்தின் உயர்கல்வி முடித்துள்ளார். லண்டன் பிசினஸ் பள்ளியில் நெஸ்லே லீடர்ஷிப் புரோக்கிராம் பயிற்சி பெற்றவர்.