பொதுப் பங்கு வெளியீட்டை தொடர்ந்து, நேற்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 சதவீதம் அளவில் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து அதன் சந்தை மதிப்பு 1.9 டிரில் லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சந்தை மதிப்பு அடிப் படையில் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக சவுதி அராம்கோ மாறியுள்ளது.
இதுவரை பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடாமல் இருந்த சவுதி அராம்கோ நிறுவனம் சமீபத் தில், அதன் மொத்த பங்கில் 1.5 சதவீதத்தை பொதுப் பங்காக வெளி யிட்டது. ஒரு பங்கின் விலை 32 ரியால் (8.53 டாலர்) என நிர்ண யிக்கப்பட்ட நிலையில், 25.6 பில்லி யன் டாலர் அளவில் அப்பங்குகள் வாங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அதன் சந்தை மதிப்பு 1.7 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு, அதன் பங்கு மதிப்பு 10 சதவீதம் உயர்ந்து 35.2 ரியாலுக்கு (9.39 டாலர்) வர்த்தகமானது. அதைத் தொடர்ந்து அதன் சந்தை மதிப்பு 1.88 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.
உலகளாவிய அளவில் சவுதி அராம்கோவை தவிர்த்து இரண்டு நிறுவனங்கள் மட்டுமே 1 டிரில்லியன் டாலருக்கு மேலான சந்தை மதிப்பை கொண்டிருக் கின்றன. ஆப்பிள் நிறுவனம் 1.19 டிரில்லியன் டாலரையும், மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 1.15 டிரில்லியன் டாலரையும் சந்தை மதிப்பாகக் கொண்டுள்ளன.