கடந்த நிதி ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) திரும்பாத கடன் தொகை ரூ.12,036 கோடி என செபி-க்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டில் எஸ்பிஐ- யின் நிதி நிலை அறிக்கையை ரிசர்வ் வங்கி தணிக்கை செய்தது. அப்போது ரூ.11,932 கோடி தொகை எஸ்பிஐ கணக்கில் விடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்
பட்டது. வங்கியின் நிகர வாராக் கடன் ரூ.1.73 லட்சம் கோடி என எஸ்பிஐ தெரிவித்தது.
ஆனால் ஆர்பிஐ தணிக்கையில் நிகரவாராக் கடன் ரூ. 1.85 லட்சம் கோடி என கண்டுபிடிக்கப்பட்டது. கடனுக்காக எஸ்பிஐ ஒதுக்கிய தொகை ரூ.1.07 லட்சம் கோடி. ஆனால் ஆர்பிஐ தணிக்கையின் கணக்கின்படி ரூ.1.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதேபோல வாராக் கடன் ரூ.77,827 கோடிக்குப் பதிலாக ரூ.65,895 கோடி என எஸ்பிஐ குறிப்பிட்டதால் ஏற்பட்ட வித்தியாச தொகை ரூ.11,932 கோடியாகும். இதன் விளைவாக கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் வங்கி ரூ.838 கோடி லாபம் ஈட்டியிருந்தாலும் வங்கி கடனுக்கு ஒதுக்கியதால் ஏற்பட்ட நஷ்டம் ரூ.6,986 கோடியாகும். வாராக் கடன் ரூ.3,143 கோடி. நிகர வாராக் கடன் ரூ.4,654 கோடியாகும்.