வணிகம்

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்துக்கு மாற்று முதலீட்டு நிதி ரூ.6,000 கோடி திரட்ட திட்டம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்துக்கு, மாற்று முதலீட்டு நிதியாக ரூ.6,000 கோடி திரட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் தகவலை தமிழ்நாடு அரசின் திட்ட மற்றும் மேம்பாடு துறை முதன்மைச் செயலர் எஸ். கிருஷ்ணன் கூறினார். அடுத்த ஆறு மாதங்களில் இந்த முதலீடு அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நேற்று சென்னையில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த தமிழ் நாடு இன்பிரா விஷன் 2013 கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதைக் குறிப்பிட்டார்.

இன்பிராஸ்ட்ரெக்சர் டெப்ட் பண்ட், ஆல்ட்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மெண்ட் பண்ட், மற்றும் இன்பிராஸ்ட்ரெக்சர் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் என புதிய வழிகளில் பிரித்து (ஐஎப்வி) நிர்வகிக்க தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் திட்டமிட்டுள்ளது. சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் செபி வழிகாட்டுதல்கள் படி இது நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த நிதியை கொண்டு பொது திட்டங்கள், அரசு- தனியார் கூட்டுத்திட்டங்கள், மற்றும் தனியார் திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.

இந்த ஐஎப்வி திட்டத்தில் முதலீடு செய்ய காப்பீடு நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், ஓய்வு நிதி, குடும்ப நிறுவனங்கள் மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களை அடையாளம் காணப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல கூடுதல் இயக்குநர் அருண் சுந்தர் தயாளன், சென்னை மாநகராட்சியில் நடை பாதை, சைக்கிள் பாதைகள், மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பதற்கு ஏற்ப திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சென்னை மாநகராட்சி தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்ற திட்ட மிட்டுள்ளது என்றும், இதனால் மாநகராட்சியின் மின் கட்ட ணத்தைப் பாதியாகக் குறைக்கத் திட்டமிடுள்ளதாகவும் குறிப்பிட் டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு நீர் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் நடராஜன் உள்ளிட்ட அரசு துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

மாற்று முதலீட்டு நிதியை கொண்டு பொது திட்டங்கள், அரசு- தனியார் கூட்டுத்திட்டங்கள், மற்றும் தனியார் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT