வணிகம்

பொருளாதாரத்தை முடுக்கிவிட அரசு கூடுதல் நடவடிக்கை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

செய்திப்பிரிவு

தற்போது பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலையை மாற்றி, பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அரசு பொருளாதாரத்தை முடுக்கிவிட சில நடவடிக்கைகளை எடுத்தது என்று டெல்லியில் நடைபெற்ற ஹெச்டி தலைவர்கள் மாநாட்டில் பேசியபோது அவர் குறிப் பிட்டார்.

அரசின் நடவடிக்கைத் தவிர பொதுத் துறை வங்கிகள் இதுவரை ரூ.5 லட்சம் கோடி வரை கடந்த இரு மாதங்களில் கடனாக வழங்கி உள்ளன. நுகர்வை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று குறிப்பிட்டார்.

நுகர்வை அதிகரிக்கவும் அதை ஊக்குவிக்கவும் பல வழி முறைகள் உள்ளன. நேரடியான அணுகுமுறையையே அரசு பின்பற்றுகிறது. அதன்படி அரசே கட்டமைப்பு திட்டப்பணிகளுக்கு கூடுதலாக செலவிடுகிறது. இதில் எஞ்சியுள்ள தொகை தொழில் துறைக்கும் மாற்றிவிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மாற்றம் கொண்டு வருவது அல்லது அதைக் குறைப் பது தொடர்பான முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில்தான் எடுக்கும் என்றார். ஏற்கெனவே வரி விகிதங் கள் பெருமளவு குறைக்கப்பட்டுள் ளன என்றும் அவர் சுட்டிக்காட் டினார். இருப்பினும் வரி குறைப்பு நடவடிக்கை என்பது அரசின் பரிசீலனையில் உள்ள பல விஷயங்களில் ஒன்று என்றும் கூறினார்.

SCROLL FOR NEXT