பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கின் முக்கிய குற்ற வாளியான நீரவ் மோடியை, தப்பி ஓடிய பொருளாதாரக் குற்ற வாளியாக மும்பை சிறப்பு நீதி மன்றம் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 15-க்குள் நீரவ் மோடி, அவ ரது சகோதரர் நிஷால் மோடி, சுபாஷ் பார்ப் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் ‘பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக’ அறிவிக்கப் படுவார்கள் என்றும் மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வைர வியாபாரியான நீரவ் மோடியும் அவருடைய உறவினர் மெகுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷ னல் வங்கியில் ரூ.14,000 கோடி அளவில் நிதி மோசடி செய்துவிட்டு கடந்த ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜாமீனில் விடு விக்க அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். அவருடைய ஜாமீன் கோரிக்கையை லண்டன் நீதி மன்றம் நிராகரித்தது. தற்போது அவருடைய நீதிமன்றக் காவல், வரும் ஜனவரி 2 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது.
இந்நிலையில், மும்பை நீதிமன் றம் அவரை தப்பியோடிய பொரு ளாதாரக் குற்றவாளியாக அறிவித் துள்ளது. ‘தப்பியோடிய பொருளா தாரக் குற்றவாளி’ சட்டம் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற மத்திய அமைப்புகள் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோடும் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய முடியும். இந்தச் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு, தப்பியோடிய பொரு ளாதாரக் குற்றவாளியாக அறி விக்கப்பட்ட முதல் நபர் விஜய் மல் லையா. அவர் மீது ரூ.9,000 கோடி நிதி மோசடி வழக்கு உள்ளது. அவரும் தற்போது லண்டனில் உள்ளார். அவரை தொடர்ந்து, இரண்டாவது நபராக நீரவ் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற நிதி மோசடி தொடர் பாக பெல்ஜியத்தை சேர்ந்த பிடிஓ என்ற நிறுவனம் தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம் மேற்கொண்ட தணிக்கையில், ரூ.25,000 கோடி மதிப்புள்ள உத்திர வாத கடிதங்களை (லெட்டர்ஸ் ஆஃப் அண்டர்டேக்கிங்) பிஎன்பி முறைகேடாக வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
வங்கி, அதன் வாடிக்கை யாளருக்கு உத்திரவாத கடிதம் (எல்ஓயூ) அளிக்கும்பட்சத்தில், அவர் வெளிநாட்டில் செயல்படும் இந்திய வங்கிக் கிளைகளில் நிதி பெற்றுக் கொள்ளலாம். அதன்படி பிஎன்பி நீரவ் மோடி, குழுமத் துக்கு ரூ.28,000 கோடி மதிப்புள்ள 1,561 உத்திர வாத கடிதங்களை வழங்கி இருக்கிறது.
அதில் 1,381 கடிதங்கள் முறை கேடாக வழங்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.25,000 கோடி ஆகும். இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் பிஎன்பி-யின் பங்கு மதிப்பு 2.27 சதவீதம் குறைந்து ரூ.62.30-க்கு வர்த்தகமானது.